"உண்மையான அரசியல்வாதியின் பொறுப்பு இதுதான்!" – உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு அரசு வேலை அறிவித்த முதல்வர் விஜய்
கரூரில் அரசியல் பிரச்சார நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரூரில் நடைபெற்ற அரசியல் பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு அரசு வேலை வழங்கும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகால வாழ்வாதார பாதுகாப்பை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையிலும் கவனம் பெற்றுள்ளது. "உண்மையான அரசியல்வாதியின் பொறுப்பு இதுதான்" என்ற கருத்துடன் பலரும் இந்த நடவடிக்கையை வரவேற்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Prasanth Subramani