ஜூலை 16-ல் கோவையின் பல பகுதிகளில் மின்தடை... TANGEDCO முக்கிய அறிவிப்பு!
ஜூலை 16, 2026 அன்று கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் TANGEDCO பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படுகிறது. பாதிக்கப்படும் பகுதிகளின் முழு விவரங்களை அறியுங்கள்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2026 ஜூலை 16 (வியாழக்கிழமை) திட்டமிட்ட மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
எஸ்.என். பாளையம் 110/11 கி.வோ., சிட்கோ (கோவை குறிச்சி) 110 கி.வோ. மற்றும் கிணத்துக்கடவு 110 கி.வோ. துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
எஸ்.என். பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர், சிட்கோ, சுந்தராபுரத்தின் சில பகுதிகள், போத்தனூர், எல்.ஐ.சி. காலனி, காமராஜ் நகர், சுளக்கல், தாமரைக்குளம், கே.எம். ஆண்டிபாளையத்தின் சில பகுதிகள், மன்றம்பாளையம் மற்றும் கொண்டம்பட்டி.
110 கி.வோ. மற்றும் 11 கி.வோ. மின் அமைப்புகளில் பிரேக்கர் பராமரிப்பு, மரக்கிளைகள் வெட்டுதல், மின் இணைப்பு பாதைகளை வலுப்படுத்துதல், மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு TANGEDCO அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Prasanth Subramani