கோவையில் 30,000 உணவு விற்பனை இடங்களில் தீவிர ஆய்வு! விதிமீறினால் ஸ்பாட் ஃபைன்
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 மாதங்களுக்கு தீவிர ஆய்வு நடைபெறுகிறது. ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், விடுதி உணவகங்கள் மற்றும் அங்கன்வாடிகள் உள்ளிட்ட 30,000 உணவு விற்பனை இடங்களில் சுகாதாரம், உணவின் தரம் மற்றும் உரிமம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
கோவையில் 30,000 உணவு விற்பனை இடங்களில் தீவிர ஆய்வு! விதிமீறினால் ஸ்பாட் ஃபைன்
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 மாதங்களுக்கு தீவிர ஆய்வு நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கோவையில் உள்ள 23 முக்கிய பகுதிகளில் சுமார் 30,000 உணவு விற்பனை இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், தனியார் விடுதி உணவகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதி உணவகங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட பல்வேறு உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை இடங்களில் ஆய்வு நடைபெற உள்ளது.
உணவு தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களில் சுகாதார நிலை, உணவின் தரம், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் உரிமம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.
ஆய்வின்போது விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை இடங்கள் மீது ஸ்பாட் ஃபைன் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த தீவிர ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
Dharshini