TNPSC வெளியிட்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. 461 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் 461 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவி பொறியாளர் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC வெளியிட்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. 461 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 45 வகை பதவிகளுக்கான மொத்தம் 461 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கிய பணியிடங்கள்

இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய பணியிடங்கள்:

  • உதவி பொறியாளர் (அமைப்பியல்) – 140
  • உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்) – 64
  • வட்டார சுகாதார புள்ளியியலாளர் – 62
  • இளநிலை புகைப்படக்காரர் – 23
  • உதவி நிலத்தியலாளர் – 19
  • தோட்டக்கலை அலுவலர் – 17
  • உதவி புள்ளியியல் புலனாய்வு அலுவலர் – 13
  • வேளாண் அலுவலர் – 11
  • தொல்லியல் துறை அலுவலர் – 10
  • உதவி தொல்லியல் துறை அலுவலர் – 10

இதனுடன், மருந்து ஆய்வாளர், சுற்றுச்சூழல் அறிவியலாளர், உதவி நூலகர், உதவி சுற்றுலா அலுவலர், கணினி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.

கல்வித் தகுதி

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக:

  • B.E / B.Tech
  • B.Sc
  • M.Sc
  • முதுகலைப் பட்டம்
  • நூலக அறிவியல்
  • சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • தொல்லியல் மற்றும் புள்ளியியல்
    போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

01.07.2026 தேதியின்படி:

  • பொதுப்பிரிவினர் – 32 வயதிற்குள்
  • SC / SCA / ST / MBC / BC / BCM – 42 வயதிற்குள்

சில பணியிடங்களுக்கு கூடுதல் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு:

  • எழுத்துத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

அடிப்படையில் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்ப மற்றும் தேர்வுக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம் – ரூ.150
  • தேர்வுக் கட்டணம் – ரூ.100

ஏற்கனவே நிரந்தர பதிவு செய்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும், SC, ST, MBC, BC உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணத்தில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளங்கள்:

முக்கிய தேதி

  • ஆன்லைன் விண்ணப்ப தொடக்கம்: மே 27, 2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 25, 2026

விண்ணப்பிக்கும் முன் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, கல்விச்சான்றுகள் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.