மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு.. முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு

மே 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு.. முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு

மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என Joseph Vijay தெரிவித்துள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய Dravida Munnetra Kazhagam அரசு கொண்டு வந்த புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மாதந்தோறும் 7-ஆம் தேதி வழங்கப்படும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்ட நிதி தாமதமானது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முந்தைய அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெண்கள் காத்திருந்த நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மகளிர் உரிமைத்தொகை வழக்கம்போல் நாளையோ அல்லது சற்று தாமதமாகவோ கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவும் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.