ஆந்திராவில் வீட்டுக்கே வரும் அரசு பேருந்துகள்: புதிய திட்டம் அறிமுகம்!
ஆந்திராவில் ஒரே பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் பேருந்தை முன்பதிவு செய்தால், பயணிகளை வீட்டுக்கே சென்று ஏற்றிச் செல்லும் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக விஜயவாடா நகர எல்லைக்குள் சோதனை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பயணிகளின் வசதிக்காக வீட்டுக்கே சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் புதிய அரசு பேருந்து சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தால், அந்தப் பகுதியில் உள்ள பயணிகளின் வீடுகளுக்கே பேருந்து சென்று அவர்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தை விஜயவாடா நகர எல்லைக்குள் சோதனை அடிப்படையில் செயல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியின் செயல்பாடுகளைப் பொறுத்து, பின்னர் இந்த சேவை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani