கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்த 41 குடும்பங்களில் 32 பேருக்கு அரசு வேலை வழங்கும் முதல்வர் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்த 41 குடும்பங்களில் 32 பேருக்கு அரசு வேலை வழங்கும் முதல்வர் விஜய்

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முக்கிய நிவாரண நடவடிக்கையாக, முதல்வர் விஜய் அரசுத் துறையில் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணிநியமன ஆணைகளை வழங்குவதற்காக முதல்வர் விஜய் கரூருக்கு நேரில் செல்ல உள்ளார். உயிரிழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகால வாழ்வாதார பாதுகாப்பை வழங்கும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. முதல்வர் விஜய் நேரில் சென்று பணிநியமன ஆணைகளை வழங்க இருப்பது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.