கோயம்புத்தூரில் பிரம்மாண்ட HR Conclave! Pride of Coimbatore 2.0 – TTS Awards 2026 இன்று தொடக்கம்
கோயம்புத்தூரில் Pride of Coimbatore 2.0 – HR Conclave & TTS Awards 2026 இன்று (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது. HR துறையின் எதிர்காலம், AI, Talent Acquisition மற்றும் பணியாளர் மேலாண்மை குறித்து சிறப்பு உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கோயம்புத்தூரில் Pride of Coimbatore 2.0 – HR Conclave & TTS Awards 2026 என்ற பிரம்மாண்ட HR மாநாடு மற்றும் விருது விழா இன்று (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது.
Triothought Tech Solutions Private Limited சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கோவை சிங்காநல்லூரில் உள்ள O by Tamara-வில் காலை 9.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. Human Resources Association Tamilnadu (HRATN) இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ Community Partner ஆக இணைந்துள்ளது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றுதல், சிறப்பு உரைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துரைகள் இடம்பெறுகின்றன. நிகழ்ச்சி அட்டவணையில் தமிழ்நாடு அமைச்சர் V. சம்பத் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பும் இடம்பெற்றுள்ளது.
HR துறையின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு, பணியாளர் மேலாண்மை, Talent Acquisition மற்றும் எதிர்கால பணிச்சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்து சிறப்பு Keynote உரைகள் மற்றும் Panel Discussions நடைபெறுகின்றன.
“HR & The Future of Work in the Age of AI” மற்றும் “Are We Behind AI?” ஆகிய தலைப்புகளில் நடைபெறும் கலந்துரையாடல்களில் முன்னணி HR தலைவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்று, AI வளர்ச்சியால் பணிச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் HR துறையின் எதிர்காலம் குறித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், HR துறையில் சிறப்பாக செயல்படும் திறமைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் Talent Transformer, Global Connect, Workforce Wizard, Talent Architect உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் TTS Awards 2026 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதிலுமிருந்து HR Professionals, Business Leaders, Entrepreneurs மற்றும் Industry Experts இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இதன் மூலம் HR துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை உருவாக்குதல், புதிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடுதல் போன்ற வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பணியிடங்களில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மற்றும் எதிர்கால திறன் தேவைகள் குறித்து HR துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், Pride of Coimbatore 2.0 – HR Conclave & TTS Awards 2026 நிகழ்ச்சி அந்த விவாதங்களுக்கு முக்கிய தளமாக அமைந்துள்ளது.
கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் இந்த பிரம்மாண்ட HR மாநாடு, HR Professionals மற்றும் தொழில்துறை வல்லுநர்களுக்கு அறிவுப் பகிர்வு, Networking மற்றும் Leadership Interaction ஆகியவற்றை ஒரே தளத்தில் வழங்கும் முக்கிய நிகழ்வாக கவனம் பெற்றுள்ளது.
Dharshini