நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய இளைஞர்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுபோன்ற நில விற்பனைகள் சட்டப்பூர்வமானவை அல்ல என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள இளைஞர் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிலவு நிலப் பதிவேடு இணையதளம் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி இந்த நிலத்தை வாங்கியதாகவும், அதற்கான பத்திரப்பதிவு மற்றும் உரிமைச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால மனைவிக்கு வித்தியாசமான திருமணப் பரிசை வழங்கும் நோக்கில் வாங்கப்பட்டதாக கூறப்படும் இந்த நிலவு நிலம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
ஆனால், நிலவில் தனிநபர்கள் சட்டப்பூர்வமாக நிலம் வைத்திருக்க முடியாது என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற நிலவு நில விற்பனைகள் சட்டப்பூர்வ உரிமையை வழங்காது என்றும், இத்தகைய விற்பனைகள் மோசடியானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Dharshini