திமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா... சிரித்தபடி கவனித்த ஈபிஎஸ்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பேரவையின் நடுவே தர்ணாவில் ஈடுபட்ட அவர்களை ஈபிஎஸ்ஸும் முதலமைச்சர் விஜய்யும் சிரித்தபடி பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா... சிரித்தபடி கவனித்த ஈபிஎஸ்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையைச் சூழ்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சில திமுக உறுப்பினர்கள் பேரவையின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.