திரையரங்கில் 1,700 நாட்களை கடந்த VTV!
சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம், சென்னை அண்ணாநகர் பிவிஆர் விஆர் மால் திரையரங்கில் மறுவெளியீட்டுக்குப் பிறகு 1,700 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம், மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள பிவிஆர் விஆர் மால் திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்ட இப்படம் தற்போது 1,700 நாட்களை கடந்துள்ளது.
முதலில் சிறப்பு காட்சியாக தொடங்கிய இப்படத்தின் மறுவெளியீடு, ரசிகர்களின் வரவேற்பால் நீண்ட திரையரங்கு ஓட்டமாக மாறியது. தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இப்படம் 1,000 நாட்களை கடந்தது.
தற்போது 1,700 நாட்களை கடந்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா, இந்தியாவில் மறுவெளியீட்டில் நீண்ட நாட்கள் திரையிடப்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளது.
சிம்பு மற்றும் திரிஷா நடித்த கார்த்திக் - ஜெஸ்ஸி கதாபாத்திரங்கள், கவுதம் வாசுதேவ் மேனனின் காதல் கதை சொல்லும் பாணி மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஆகியவை இப்படத்திற்கு தொடர்ந்து கிடைத்து வரும் ரசிகர்களின் வரவேற்புக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
Dharshini