நேபாள வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் 16 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் சென்சார்கள்!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து சிக்கிமில் 16 ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் நீர்மட்ட மாற்றங்களை கண்காணிக்க சென்சார்கள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நேபாள வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் 16 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் சென்சார்கள்!
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிப்பாறை தொடர்பான பெருவெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, சிக்கிம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சிக்கிமில் பெரியது, சிறியது என 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இதில் 16 ஏரிகள் அதிக ஆபத்துக்குரியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 13 ஏரிகள் வடக்கு சிக்கிமிலும், 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் அமைந்துள்ளன.
இந்த 16 ஆபத்தான ஏரிகளில் பெரும்பாலானவற்றில் நீர்மட்டம் மற்றும் நீரின் அளவில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு சிக்கிமில் தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஏரிகளின் நீர்மட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் தெரிவித்துள்ளார்.
2023-ல் சிக்கிமில் ஏற்பட்ட தெற்கு லோனாக் பனிப்பாறை ஏரி வெள்ளப் பேரிடரின் அனுபவத்தையும், தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரையும் கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கியமாக, சிக்கிமில் அடையாளம் காணப்பட்டுள்ள 16 ஏரிகளிலும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை. அவை அதிக ஆபத்துக்குரிய ஏரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றின் நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Dharshini