DVAC பதிவு செய்த வழக்கு – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது. சுமார் ரூ.1,020 கோடி சட்டவிரோதப் பலன் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

DVAC பதிவு செய்த வழக்கு – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நடவடிக்கை!

முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்து சுமார் ரூ.1,020 கோடி அளவில் சட்டவிரோதப் பலன் பெற்றதாக DVAC வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்களுடன் தொடர்புடைய 30 இடங்களில் DVAC சோதனை நடத்தியது. சோதனையில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கே.என். நேரு இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்டியுள்ளார்.