கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் கொண்டாட்டம்.. இசை, நடனம், உடற்பயிற்சியுடன் வாகனமில்லா காலை!
கோவையில் மே 31 அன்று ஆர்எஸ் புரம் டிபி சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை, நடனம், உடற்பயிற்சி மற்றும் சமூக நிகழ்வுகளுடன் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
கோவை மக்களுக்கு உற்சாகமான வார இறுதி அனுபவத்தை வழங்கும் வகையில், ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ (Happy Streets) நிகழ்ச்சி மே 31 அன்று ஆர்எஸ் புரத்தில் நடைபெற உள்ளது.
வாகனங்கள் இல்லாத சாலையில், இசை, நடனம், உடற்பயிற்சி மற்றும் பல்வேறு சமூக நிகழ்வுகளுடன் இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழக்கூடிய வகையில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் ஆரோக்கிய செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.
நிகழ்ச்சி விவரங்கள்
???? தேதி: மே 31, 2026
???? நேரம்: காலை 6.00 மணி முதல்
???? இடம்: டிபி சாலை (DB Road), ஆர்எஸ் புரம், கோயம்புத்தூர்
????️ நுழைவு கட்டணம்: இலவசம்
காலை நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், உடற்பயிற்சி ஆர்வலர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்கேற்க உள்ளனர்.
குடும்பத்தினருடன் ஒரு மகிழ்ச்சியான ஞாயிறு காலையை கழிக்க விரும்புபவர்களுக்கு, ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமையும்.
Prasanth Subramani