தேசிய ஆசிரியர் விருதுகள்!
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்குகிறார். இந்த ஆண்டு 48 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி, பாலிடெக்னிக் நிறுவனங்களைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்குகிறார்.
இந்த ஆண்டு 27 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 6 மத்திய அரசு அமைப்புகளில் இருந்து 48 பள்ளி ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணியாளர்களுக்கும் தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
Dharshini