வரலாற்று தருணம்: தமிழக சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர் தலைமை!
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் TVK எம்.எல்.ஏ. வி. சத்தியபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை வழிநடத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில், TVK எம்.எல்.ஏ. வி. சத்தியபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தலைமை தாங்கினார்.
இதன் மூலம் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய முதல் பெண் என்ற பெருமையை வி. சத்தியபாமா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வி. சத்தியபாமா, திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த TVK எம்.எல்.ஏ. ஆவார். மேலும், அவர் சபாநாயகர் தலைமையிலான Panel of Chairpersons குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில், இந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை வழிநடத்துவார்கள்.
குறிப்பாக, இது அதிகாரப்பூர்வ சபாநாயகர் பதவி ஏற்பு அல்ல. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை வழிநடத்திய நிகழ்வாகும்.
Dharshini