ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம்! செப்டம்பர் 3 முதல் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் செப்டம்பர் 3 முதல் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம்! செப்டம்பர் 3 முதல் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 3-ம் தேதி முதல் நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாயவிலைக் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் வரத்து குறைந்தது மற்றும் போக்குவரத்து செலவு அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிச்சந்தை விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Dharshini