9 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு: நேபாள சுரங்க விபத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் மண், பாறை சரிவைத் தொடர்ந்து நீர்மின் திட்ட சுரங்கத்தில் 9 நாட்களாக சிக்கியிருந்த 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் மண், பாறை சரிவைத் தொடர்ந்து Upper Trishuli-3A நீர்மின் திட்ட சுரங்கத்தில் 9 நாட்களாக சிக்கியிருந்த இரு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சஞ்சய் சாஹ் (30), கபீர் மகர்ஜன் (45) ஆகிய இருவரும் சுரங்கத்துக்குள் சுமார் 170 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்க நேபாள ராணுவ மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடினர். நீண்ட முயற்சிக்குப் பிறகு இருவரும் பத்திரமாக சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சஞ்சய் சாஹ்வுக்கு பெரிய அளவிலான காயங்கள் இல்லை எனவும், கபீர் மகர்ஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் மண், பாறை சரிவுகளால் பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர்மின் திட்ட சுரங்கங்களிலும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு இரு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் மற்றவர்களையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் இந்த மீட்பு சம்பவத்தால் அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Dharshini